* ஓதி எறியப்படாத முட்டைகள்*
ரொம்ப நாட்களாக படிக்க வேண்டும் என நினைத்த புத்தகம். சகோதரி ஹுதாவால் சாத்தியமானது...
இதுவரை பழக்கமேயில்லாத நாகர்கோவில் வட்டார மொழி முதலில் படிக்க கஷ்ட்டமாக இருந்த துதான் படிக்கப் படிக்க அப்படியே ஆழத்திற்கு இட்டுச் சென்றது........
"" கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல்..1999ம் வருடம் முஸ்லிம் முரசில் தொடராக வந்த போது தொடரந்து படிக்கக் கிடைக்கவில்லை...""
இஸலாமிய வாழ்வியலை ரத்தமும் சதையுமாக பாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர் மீரான் மைதீன்....
அந்த நாளைய முஸ்லிம் குடும்பங்கள் முதலில் " பர்மா" சம்பாத்தியத்தையும் அதன்பின்னர், " அரபு" நாட்டு சம்பாத்தியத்தையும் நம்பியே தங்கள் வறுமைப்பாட்டை போக்க விழைந்திருக்கிறது...
முதலில் கவர்ந்த து ,இருநூற்றம்பது வருட பள்ளி வேப்பமரம்...நூற்றைம்பது வருடத்துப் பள்ளிவாசல். அதன் மோதியார்...
"" வெள்ளிக்கிழமை " குத்பா" தொடங்கியதும்,டீக்கடை நாயரின் குடிசை வீடு தீப்பற்றி எரிகிறது. நாயரின் மனைவி அலறுகிறாள். " குத்பா" ஆரம்பிச்சுருச்சு யாரும் வெளிய போக கூடாது. ஆலீமின் குரலுக்கு இளைஞர் பட்டாளம் கட்டுப்படவில்லை. முதல் ஆளாக பக்கர் ஓடுகிறான்..அவன் பின்னே இளைஞர் பட்டாளம் ஓடிப்போய் எரியும் நெருப்புக்குள் நுழைந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்...
"" ஒலு செய்ய இருக்கும் ஹவுலு நீரில், முதல் முறையாக ,நாயரின் குடிசை ஒளு செய்து தனது உஷ்ணத்தை தணித்துக் கொண்டது""... இந்த வரிகள் மனங் கவர்ந்த து"".....
" மொய்து சாகிபு- சுபைதா,...
குச்சித்தம்பி- செய்தூன்
ஹமீது சாகிபு- தஸ்லிமா...
ஐந்து நேரமும் விடாத தொழுகையாளி ஹமீது சாகிபு. மூன்று ஆம்பளைப் பிள்ளைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பி பணங்களை மூட்டை கட்டி வைத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலி.
ஊர்ச் சொத்தையெல்லாம் ,தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் எனும் தீராத பேரவா.... தன் பாவங்களை, ஐந்து நேரத் தொழுகை , சுத்தப்படுத்தி விடும் என நம்புகிறார்... ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட ஹமீது சாகிபுகள் உள்ளனர்...
" தன் குமர்களை கரையேற்ற ,தன் அருமை மகன் எப்படியாவது வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என எடுபிடி வேளைகளை சலிக்காமல் செய்யும் குச்சித்தம்பியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது... மூத்த மகள் பலிகடாவாக ஆக்கப்படும் சூழ்நிலை வேதனை..."
" மொய்து- சுபைதாவின் செல்ல மகளின் நிக்காஹ், ஹமீது மகன் ஜின்னாவுடன்.
வெளிநாட்டிலிருந்து வந்த சபுராளி. ஆயிஷாவின் கனவில் வந்த ராஜகுமாரன்... திருமணச் சடங்குகளும் அலங்காரங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. என் திருமணத்தில் என் அண்ணண் அப்போது மருத்துவ மாணவர்....,, பித்தளை அண்டாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு என்னை புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட நினைவு வந்த தை தவிர்க்க முடியவில்லை."
பேய்க்கதைகள் ,காலனி கட்டிடம் பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்கும் சிறுவர்களை ,அள்ளிக்கொண்டு போனாலும் , அவர்கள் பண்ணும் அலம்பல்கள்,சாத்தான்கோயில் கொடை விழா, ஊருக்கு ரயில் வந்த து வஞ்சனை செய்வினை, எதையும் விடவில்லை..
சுக்குக் காப்பிக்கடை சுல்தான் மிகவும் சுவாரஸ்ய மனிதர்...
" அலைகள் ஓய்வதில்லை" ராதாவின் மேலுள்ள அபிமானத்தை, வைத்து அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், ராதா அம்பிகா பெயர்களில் கடிதங்களை அனுப்பி அவரை பாடாய் படுத்துவதும், தொடர்ந்து நாற்பத்தி ரெண்டு நாள் முட்டையை தலையை சுற்றி குளத்தில் எறிவதுமாக , , இதைப் பார்த்து விட்ட ஹமீது அவரை இன்னும் பயமுறுத்த குச்சித்தம்பியின் மகனை விட்டு பயமுறுத்தி,, அவரை தொடர்ந்து பேதியாக விடுவதும்,, ஆசிரியரின் தீராத நகைச்சுவைக்கு பெரிய சான்று..
அறிவிற் சிறந்த ஆயிஷாவை அந்த ஊர் வழக்கப்படியே பருவம் எய்திய பின் ,உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட பெற்றோர்கள் அவசரப்பட்டு, பணக்கார ஹமீது மகன் ஜின்னாவிற்கு கல்யாணம் செய்து வைக்க , பணத்தாசை பிடித்த ஹமீது கல்யாணத்துக்கு முன்னரே தோப்பை எழுதி வாங்கிக் கொண்டதோடமில்லாமல் மருமகளை , கணவனும் மனைவியிமாய் பாடாய் படுத்தி எடுக்கின்றனர். ஜின்னா மனைவியிடம் பாசத்தை பொழிவதும், வெளிநாடு சென்ற பின்னர் அவன் மனதை மாற்றுவதும், அந்தக்காலத்தில் சகஜம்....
ஆயிஷா பிள்ளையை பெற்றெடுக்கு முன் தவிக்கும் தவிப்பு கணவனிடம் ஒரு வார்த்தை போனிலாவது பேசி விடமாட்டோமா எனும் ஆதங்கம், பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவுக்கும் தீராத வேதனை..
குச்சித்தம்பியின் மௌத், மகனின் வெளிநாட்டின் ஜெயில் வாசம் குடும்பத்தின் அவல நிலை, ஹமீதின் அட்டகாசம் எல்லாம் எங்களின் சிறு வயது ,கிராமத்தில் நடந்த காட்சிகள் இப்போதும் கண் முன்னே நினைவில்...
கடைசியில் ஆயிஷாவை இப்படி மனப்பிரழ்வுக்கு ஆளானவளாய் காட்டியிருப்பதை தான் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
"" இஸ்லாமிய சமுதாயத்தில் " படிப்பும் பதவியும் இல்லாததால்த்தான் ஆண் பெண் இருவருக்குமே இந்தக் கஷ்டம் என்ற நெனைப்பு வந்து விடுகிறதுதான்""
" இப்போதய படிப்பறிவு முன்னேறிய காலத்திலும் கூட , பரவலாக அங்கங்கே நம் சமுதாய பெண்களின் நிலமைகளில் பெரிதாக மாற்றம் வந்து விடவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை"....
ஜஹ்பர் மதீனா.
22-11-2023
No comments:
Post a Comment