Monday, 27 May 2024

"தமிழ்முஸ்லிம் பெண்புலவர்கள்" எம்.மீரான் மைதீன்

தமிழ் முஸ்லிம் புலவர்கள் வரிசையில் மூன்று பெண்புலவர்கள் 
செய்யது ஆசியா உம்மாள்,
கச்சிப் பிள்ளையம்மாள்,
இறசூல் பீவி பரிமளத்தார் என மூவருள்ளனர்.

கச்சிப்பிள்ளையம்மாள் பற்றிய சிறுகுறிப்பு.

# தமிழ்நாட்டின் இளையான்குடியில் தோன்றியவர் கச்சிப்பிள்ளையம்மாள்.
# இவரின் சகோதரர் திருப்பரங்குன்றம் மலை மீது அடங்கப்பட்டிருக்கும் சிக்கந்தர் ஒலியுல்லா மீது அன்பு கொண்டவர்.கச்சிப்பிள்ளையம்மாளின் பாடல்கள்1918 ல் அச்சான மெய்ஞ்ஞான மாலையில்இடம்பெற்றவைகள்.
மெய்ஞ்ஞான மாலை,மெய்ஞ்ஞானக் குறவஞ்சி,மெய்ஞ்ஞான ஊஞ்சல், மெய்ஞ்ஞான கும்மி ஆகியவை.

தமிழ் முஸ்லிம் பெண்பால் புலவர்கள் வரியைில்
 "செய்யது ஆசியா உம்மாள்.
வள்ளல் சீதாக்காதியின் மரபிலுள்ளவர்.
இளமையில் தனித்திருந்து இறைநேசச் செல்வர்களின் துதிபாடி இறைதியானத்தில் நிலைத்தவர்.
தனது இல்லத்தில் பெரும்பாலான நேரத்தில் மேல்மாடியில் செலவிட்டதால் "மேல் வீட்டுப் பிள்ளையென அழைக்கப்பட்டார்.கல்வத்து நாயகத்திடம் தீட்சை பெற்று சீடரானவர். 1948 ல் தனது 80வது வயதில் கீழக்கரையில் காலமானார்.
 மெய்ஞ்ஞான இரத்திணம்,
மாலிகா இரத்தினம், என இருபகுதியாக இவரின் பாடல்கள் இருக்கின்றன.
இவரின் பாடல்கள் அனைத்தும் அரபுத் தமிழில் எழுதப்பட்டதாக இருக்கிறது.

தமிழ் முஸ்லிம் பெண்பால் புலவர்கள் வரிசையில்
 "இறசூல் பீவி பரிமளத்தார்"

 தென்காசியில் வாழ்ந்த சின்ன மீரான் என பெயருடைய முகமது மீரான் சாகிபு மகன் முகமது காசீம் என்ற பரிமளத்தாரின் மனைவியே இறசூல் பீவி பரிமளத்தார்.

1910 ல் இறசூல் பீவியின் புதல்வன் முகமது அப்பா சாகிபால் நூலாக்கப்பட்ட பரிமளத்தார் பாடல் என்ற நூலில் இவரின் "ஞானாமிர்த சாகரம்"என்ற நூலும் இடம் பெற்றுள்ளது.
தென்காசியில் பிறந்த இவர் திருவனந்தபுரம்,புணலூர்,கொழும்பு,
முதலான நகரங்களுக்குச் சென்று மக்களுக்கு ஞான வழியைக் காட்டியதாக குறிப்பு உள்ளன.

No comments:

Post a Comment

வளர்பிறை

மீரான் மைதீன் பயணத்திலேயே எழுத்தாளர் ஜமீலா ராசிக்கின் "அது ஓரு பிறைக்காலம்" வாசித்தேன்.நினைவுகளை மீட்டித்தரும் அனுபவப்...